“கேப்டனாக இருப்பதால்தான் இடம்” – பராக்கை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் , ரியான் பராக் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் – பெங்களூரு போட்டியில் பராக் 3 ரன்களில் அவுட் ஆனார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “பராக் கேப்டனாக இருப்பதால்தான் அணியில் உள்ளார். ஸ்டைல் என்ற பெயரில் அலட்சியமாக விளையாடி அவுட் ஆனார். பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்” என்றார்.

Also Read
பெங்களுரு அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு
“கேப்டனாக இருப்பதால்தான் இடம்” - பராக்கை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்

இந்த போட்டியில் துருவ் ஜுரல் 81* ரன்களும், வைபவ் சூர்யவன்சி 78 ரன்களும் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். 202 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் , 18 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல பார்மில் உள்ளது. நாளை ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Source link