கேரளம் மாநில பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஜவகர்நகர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இது ஒரு முக்கியமான தேர்தல். மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
சட்டமன்றத்திற்கு சென்று ரகளை செய்வதற்கோ, கணினியை உடைப்பதற்கோ அல்ல. மாறாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை நாங்கள் கேட்கிறோம். கேரளாவில் தொங்கு சட்டமன்றம் அமையும். பா.ஜ.க. ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
