சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திப்பதாவது;-
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், (வண்டி எண்: 12695) வருகிற மார்ச் 13ம் தேதி (நாளை மறுநாள்) சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டும் ரெயில் கோட்டயத்தில் நிறுத்தப்படும். இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், (வண்டி எண்: 12696) வருகிற 14ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட இருந்த ரெயில், கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16127) வருகிற 12ம் தேதி (நாளை) காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவிலில் நிறுத்தப்படும். நாகர்கோவில் – குருவாயூர் இடையே ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், குறுவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், (வண்டி எண்: 16128) வருகிற 13ம் தேதி (நாளை மறுநாள்) குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட இருந்த ரெயில், அடுத்த நாள் காலை 6.33 மணிக்கு நாகர்கோவில் இருந்து புறப்படும்.
மேலும், திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், (வண்டி எண். 12624) வருகிற 14ம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்படும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, கொட்டாஞ்சேரி மற்றும் கொட்டாயஞ்சேரி ஆகிய இடங்களில் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். ஆலப்புழா, சேர்த்தலா, எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
கன்னியாகுமரி – திப்ருகார் விவேக் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 22503) வருகிற 14ம் தேதி காலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, செங்கனூர் மற்றும் கோட்டயம், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். காயங்குளம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
