கேரளா, புதுவை, அசாம் சட்டமன்ற தேர்தல்; வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.இதில் தமிழ்நாடு சட்டசபை மே 10-ந்தேதியும், புதுச்சேரி சட்டசபை ஜூன் 15-ந்தேதியும் ஆயுட்காலத்தை நிறைவு செய்கின்றன.

எனவே இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த பணிகளை தேர்தல் கமிஷன் நிறைவு செய்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

இதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 23-ந்தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 26-ந்தேதி கடைசி நாளாகும்.

Source link