‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’, ‘பிரதர்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்கத்தில் ‘மேட் இன் கொரியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாகிறது.
இந்தப் படம் குறித்து பிரியங்கா மோகன் கூறும்போது. “சிறுவயதில் இருந்தே கொரியாவுக்கு போக வேண்டும் என பெரிய கனவோடு இருக்கும் பெண்ணின் கதைதான் இது. கொரியா மிகவும் அழகான நாடு. படப்பிடிப்புக்காக அங்கு சென்றபோது உணவுக்காக சற்று தடுமாறிதான் போனோம். கொண்டு சென்ற பருப்புப்பொடியை வைத்துதான் சமாளித்தேன். பின்னர் அந்நாட்டு உணவுகள் பழக்கமானது.
அங்குள்ள மக்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. எந்த வேலையாக இருந்தாலும், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது தலைகுனிந்து ‘கம்சமிதா’ (நன்றி) என்று முதலாளிகளிடம் சொல்லித்தான் கிளம்புவார்கள். அந்த பழக்கம் எனக்கு பிடித்து போனது. அந்த நன்றி சொல்லும் பழக்கத்தை நானும் கற்றுக்கொண்டேன்”, என்றார்.
