கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் நிலையான திட்டமில்லை: இந்திய முன்னாள் வீரர்

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே கொல்கத்தா அணி தொடர்பாக அளித்த ஒரு பேட்டியில்,

‘2024-ம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அந்த வெற்றியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பில் சால்ட் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்து விட்டது. வீரர்களை தக்கவைக்கும் விஷயத்தில் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் நிலையான திட்டமில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பில் சால்ட்டை விடுவிக்கும் விவகாரத்தில் கொல்கத்தா அணி தவறான முடிவை எடுத்து விட்டது. கோப்பையை வென்ற ஒரு கேப்டன் இருப்பது அனுகூலமாகும். அந்த சாதகமான அம்சத்தை அவர் கள் விட்டுவிட்டார்கள். அவர்கள் தங்களது முக்கியமான வீரர்களை எப் படி தக்கவைப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் தடுமாற வேண்டியது இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Source link