“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை ராமர்” – ரன்பீர் கபூர்

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் “ராமாயணம்” திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரன்பீர் கபூர், “ராமர் என்பது ஒரு கதாபாத்திரம் மட்டும் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. கருணை, தைரியம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமான ஒரு மனிதராக நடிப்பது எனக்கு பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கிறது,” என்று கூறினார்.

Also Read
10 நாட்களில் ரூ.2,500 கோடி வசூல்… திரையுலகை கலக்கும் சயின்ஸ் பிக்சன் படம்
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை ராமர்” - ரன்பீர் கபூர்

இப்படத்தில் சீதையாக சாய் பல்லவி, அனுமானாக சன்னி தியோல், லக்சுமணனாக ரவி துபே மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.

Source link