கோயம்பேடு காய்கறி விலை இன்று (ஏப்ரல் 6, 2026): பீன்ஸ், வெண்டை விலை உயர்வு- எலுமிச்சை கிலோ ரூ.160! – koyambedu vegetable market price april 6 with few green lemon increase

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறி விலை பெரிதும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 6ஆம் தேதியான இன்றும் சில காய்கறிகளை தவிர்த்து எஞ்சியவை அனைத்து குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price April 6 Koyambedu Market(புகைப்படங்கள்Samayam Tamil)
வட தமிழகத்தில் வசிப்போருக்கு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இதை வைத்து தான் சில்லறை விற்பனையில் விலை ஏற்றத்தை நிர்ணயம் செய்வர். ஈரான் போரின் தாக்கத்தால் தமிழக இல்லங்கள் வரை கேஸ் தட்டுப்பாட்டை எதிரொலிக்க செய்திருக்கிறது. மேலும் காய்கறிகள் லோடு ஒருபுறம் குவிந்து, அதை வாங்குவதற்கு சரியான ஆட்கள் இல்லாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

கோயம்பேட்டில் தேங்கும் காய்கறிகள்

ஏனெனில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் கோயம்பேடு வந்து மொத்தமாக வாங்கி செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே வீணாகும் காய்கறிகளை முடிந்தவரை குறைந்த விலைக்கு தள்ளி விடும் நிலையை பார்க்க முடிகிறது. கோயம்பேட்டில் இன்றைய (ஏப்ரல் 6, 2026) காய்கறிகள் விலை நிலவரத்தை பற்றி விசாரிக்கையில், கோடை சீசன் தொடங்கி விட்டதால் எலுமிச்சை மட்டும் விலை உயர்ந்திருக்கிறது.

பசியால் ஏற்படும் தலைவலியை போக்கும் காய்கறி வகைகள்?

கோடை சீசன் – எலுமிச்சை விலை உயர்வு

ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பழத்தின் விலை 8 முதல் 10 ரூபாய் வரை சென்னைக்குள் விற்கின்றனர். அதுவே புறநகர் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஒரு பழம் 15 ரூபாய் வரை விற்பனை செய்வதாக கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சில பச்சை காய்கறிகள் மட்டும் சற்று விலை உயர்ந்துள்ளன. அவை பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவை ஆகும். மற்ற காய்கறிகளின் விலையில் மாற்றமில்லை என்று குறிப்பிட்டார்.

வ.எண் காய்கறிகள் இன்றைய விலை (ரூபாயில்)
1 வெங்காயம் 20 / 18
2 தக்காளி 15 / 10 / 8
3 உருளை 15 / 13 / 10
4 சின்ன வெங்காயம் 40 / 35 / 30
5 ஊட்டி கேரட் 30 / 25 / 20
6 பீன்ஸ் 70 / 55 / 40
7 பீட்ரூட் 25 / 20
8 சவ் சவ் 30 / 25
9 முள்ளங்கி 20 / 15
10 முட்டை கோஸ் 10 / 8
11 வெண்டைக்காய் 40 / 35
12 உஜாலா கத்திரிக்காய் 25 / 20
13 வரி கத்திரிக்காய் 20 / 15
14 காராமணி 40 / 35
15 பாவக்காய் 25 / 20
16 புடலங்காய் 25 / 20
17 சுரக்காய்: 15 / 10
18 சேனைக்கிழங்கு 30 / 25
19 முருங்ககாய் 30 / 20 / 10
20 சேமகிழங்கு 20 / 15
21 காலிபிளவர் 20 / 10
22 வெள்ளரிக்காய் 25 / 22
23 மிளகாய் 50
24 பச்சை மிளகாய் 30 / 25
25 பட்டாணி 30 / 25
26 இஞ்சி 65 / 60 / 50
27 பூண்டு 160 / 140 / 100
28 அவரைக்காய் 60 / 55
29 மஞ்சள் பூசணி 12 / 10
30 வெள்ளை பூசணி 10
31 பீர்க்கங்காய் 25 / 20
32 எலுமிச்சை 160 / 120
33 நூக்கள் 20 / 15
34 கோவைக்காய் 30 / 25
35 கொத்தவரங்காய் 20 / 15
36 வாழைக்காய் 7 / 5
37 வாழைதண்டு, மரம் 35 / 30
38 வாழைப்பூ 25 / 20
39 குடைமிளகாய் 35 / 30
40 வண்ண குடமிளகாய் 50
41 கொத்தமல்லி 6
42 புதினா 3
43 கருவேப்பிலை 40
44 கீரை வகைகள் 12
45 மாங்காய் 25 / 20
46 பொள்ளாச்சி தேங்காய் 55 / 52