கோயம்பேடு காய்கறி விலை சரிவு, பழங்கள் விலை உயர்வு- குவியும் லோடால் வியாபாரிகள் அவதி! – koyambedu vegetables market dumping free distribution for iran war impact

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை மளமளவென்று குறைந்து காணப்படுகிறது. அதேசமயம் பழங்கள் விலை உயர்ந்துள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Vegetables Price Hike Koyambedu Market(புகைப்படங்கள்Samayam Tamil)
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் போர்ச் சூழல் தமிழக இல்லங்கள் வரை எதிரொலித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, உணவகங்கள் மூடல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் லாரிகள் மூலம் காய்கறிகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கேற்ப தேவைகள் பெரிதாக இல்லை என்பதால் தேக்கி வைக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

– வெங்காயம்: 20/18
தக்காளி: 15/10/8
– உருளை: 15/13/10
– சின்ன வெங்காயம்: 40/35/30
– ஊட்டி கேரட்: 30/25/20
– பீன்ஸ்: 50/45/30
– ஊட்டி பீட்ரூட் 25/20
– சவ் சவ்: 15/13
– முள்ளங்கி: 15/13
– முட்டை கோஸ்: 10/8
– வெண்டைக்காய்: 35/25
– பாவக்காய்: 25/20
– புடலங்காய்: 25/20
– சுரக்காய்: 15/10
– முருங்கைகாய்: 50/40/30
– சேமகிழங்கு: 20/15
காலிபிளவர்: 20/10
– வெள்ளரிக்காய்: 15/12
– மிளகாய்: 60
– பச்சை மிளகாய்: 30/25
– பட்டாணி: 30/25
– இஞ்சி: 65/60/50
– பூண்டு: 120/110/100
– அவரைக்காய்: 20/15
– மஞ்சள் பூசணி: 12/10
– வெள்ளை பூசனி: 10
– எலுமிச்சை:70/50
– வாழைக்காய்: 7/5
– வாழைப்பூ: 25/20
– குடைமிளகாய்: 35/30
– கொத்தமல்லி: 5
– புதினா: 2
– கருவேப்பிலை: 80
– கீரை வகைகள்: 10
– மாங்காய்: 60/50
– பொள்ளாச்சி தேங்காய்: 45/43

கேரட் பாயசம்

பழங்கள் விலை உயர்வு

இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக கப்பல்கள், விமானங்கள் மூலம் கொண்டு வரப்படும் பழங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பழங்களின் விலையில் ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் காஷ்மீர், ஹிமாச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.இவற்றின் வருகை முடிவுக்கு வந்தால், அதன்பிறகு எகிப்து, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். தற்போதைய சூழலில் எகிப்து ஆப்பிள்கள் 18 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு 3,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல் 15 கிலோ கொண்ட ஆரஞ்சு ஒரு பாக்ஸ் 1,000 ரூபாயில் இருந்து 1,700 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலவசமாக கேரட் விநியோகம்

இதுதொடர்பாக கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் அவர்களிடம் கேட்கையில், காய்கறிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும் பெரிதாக வாங்குவதில்லை. இதனால் விலை சரிந்துவிட்டது. சமீபத்தில் கூட கொளத்தூர் ரெட்டேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள என்னுடைய கடையில் ஊட்டி கேரட்டை மக்களுக்கு இலவசமாக கொடுக்க நேர்ந்தது என்று வேதனை தெரிவித்தார்.