கோவை ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

கோவை,

நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவபெருமானை வழிபடும் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவராத்திரியை கொண்டாடினர். அந்த வகையில், கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டு தோறும் கோலாகலமாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்றும் மகாசிவராத்திரி விழா களைகட்டியது.

அதில் கலந்து கெர்ண்ட பக்தர்கள் இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து வைத்திருக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சங்கீத கச்சேரி உள்ளிட்டவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றன. இதில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

அதில் துரந்தர் படி நடிகை சாரா அர்ஜுன், தமன்னா, கே.ஜி.எப். படம் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மௌனி ராய் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். பக்தர்களுடன் இணைந்து அவர்கள் ஆனந்தமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source link