கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை – செல்வப்பெருந்தகை வரவேற்பு

சென்னை,

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட மூன்று பேருக்கும் நீதிமன்றம் மிகக் குறுகிய காலமான 126 நாட்களிலேயே வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கின்றேன். இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையையும் பாராட்டுகிறேன்.

Also Read
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்
கோப்புப்படம்

இந்த தீர்ப்பின் மூலம் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கியிருப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தப்பிக்க முடியாது என்ற செய்தியை சமூகத்துக்கு தெரிவிக்கிறது.

Also Read
கச்சா எண்ணெய் விவகாரம்: உங்கள் வேலையை பாருங்கள்…டிரம்பிற்கு கமல்ஹாசன் கண்டனம்
கோப்புப்படம்

பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் உரிமைகளை உறுதி செய்வது அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்பாகும். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்.

இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைத்திருக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

Source link