கோவை-ஜெய்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை,

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“கோவையில் இருந்து ஜெய்பூருக்கு வருகிற ஜூன் 4-ந் தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06181) இயக்கப்படுகிறது. அதே போல, ஜெய்பூரில் இருந்து கோவைக்கு வருகிற 12-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) வாராந்திர சிறப்பு ரெயில் (06182) இயக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link