கோவை,
கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் ஆட்களை இறக்கி வேலை பார்த்து வருவதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றம் சாட்டி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கரூரில் இருந்தும் ஆட்கள் இறக்கவில்லை, வேலூரில் இருந்தும் ஆட்களை இறக்கவில்லை. கோவையில் இருக்கும் ஒவ்வொரு கழக நிர்வாகிகளும் எங்களுக்கு கழக சிப்பாய்கள் போல வேலை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் திமுகவை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். வெற்றியை உருவாக்கி தர கழக உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே எங்களுக்கு வேறு இடத்தில் இருந்து ஆட்களை இறக்க வேண்டியதில்லை. இங்கு இருக்கும் 10 தொகுதிகள் மட்டுமல்ல இன்னும் பத்து தொகுதிகளில் கூட வெற்றி பெறும் தகுதி திமுகவிற்கு உள்ளது.
அதிமுக வேட்பாளரும் இந்த தொகுதியை சார்ந்தவர் அல்ல, அவரைப் போல நானும் வெளியூரை சேர்ந்தவன். அவர் ஏதாவது இந்த தொகுதிக்கு நல்லது செய்திருந்ந்தால் அதை சொல்லி வாக்கு சேகரிக்கட்டும். நான் இந்த தொகுதிக்கு சாலை பணிகள் உட்பட அதிகமான திட்டங்களை அடிக்கல் நாட்டி நிறைவு செய்துள்ளேன். இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
