சட்டசபை தேர்தலில் களமிறங்கும் சினிமா பிரபலங்கள் யார்-யார்?

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்பட சினிமா பின்னணி கொண்ட பலரும் களம் காண்கிறார்கள். இது பற்றியவிவரங்கள் பின்வருமாறு:

* பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி

* நாம் தமிழர் கட்சியின் சீமான் காரைக்குடியில் போட்டியிடுகிறார். அக்கட்சி சார்பில் இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கில் போட்டியிடுகிறார்.

* நடிகர் இயக்குனர் சுந்தர் சி – புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டி

* நடிகர் ஸ்ரீநாத்: தவெக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

* நடிகர் கருணாஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதய சூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் எனத்தெரிகிறது.

*மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Source link