சென்னை,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இதற்காக மத்திய மந்திரியும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னைக்கு வந்தார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முடிவில் தொகுதி பங்கீட்டுகள் இறுதி செய்யப்பட்டன.
அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக கட்சிகளின் தொகுதி உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
பாமக உத்தேச பட்டியல்:-
* பாப்பிரெட்டிபட்டி
* பென்னாகரம்
* கும்மிடிப்பூண்டி
* தருமபுரி
* குன்னம்
* விழுப்புரம்
* அந்தியூர்
* ஆற்காடு
* ஓமலூர்
* திருவள்ளூர்
* சங்ககிரி
* பாலக்கோடு
* விக்கிரவாண்டி
* திருத்தணி
* செய்யாறு
* செஞ்சி
* ஜெயங்கொண்டம்
* திண்டிவனம் (அ) அரூர்
* மயிலம்
* வானூர் (அ) காட்டுமன்னார்கோவில்
* நெய்வேலி
* விருத்தாசலம்
* மேட்டூர்
* சோளிங்கர்
* புவனகிரி
அமமுக உத்தேச பட்டியல்:-
* திருவையாறு
* ஸ்ரீவைகுண்டம்
* பூந்தமல்லி
* சோளிங்கர்(அ)திருப்பத்தூர்
* அரூர்
* நாங்குநேரி
* ஒட்டப்பிடாரம்
* பெரியகுளம்
* மதுரை மத்தி
* தஞ்சாவூர்
* காரைக்குடி
* திருச்சி மேற்கு
* மன்னார்குடி
