சட்டசபை தேர்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை?

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தங்களது கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளன.

இதில் தி.மு.க., ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, மறுபுறம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தவர்களிடம் நேர்காணல் என பரபரப்பாக இயங்குகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் திமுக மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. சில தொகுதிகளில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்ட தொகுதிக்களுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கும் நிலையில், பொன்முடி ஏற்கனவே விருப்ப மனு அளிக்கவில்லை. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிட்ட மாட்டார் என தகல் வெளியாகியுள்ளது. 1989 முதல் 8 சட்டமன்றத் தேர்தலில் பொன்முடி தொடர்ச்சியாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார். தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். திருக்கோவில் தொகுதியில் போட்டியிட பொன்முடியின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார்.

Source link