சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமானவர் துரைமுருகன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்தார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் அறிவாலாயத்தில் இன்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் துரைமுருகன் காரில் வந்து இறங்கினார்.
அப்போது பத்திரிகையாளர்களை பார்த்து ‘நான் வந்துட்டேன்’… எனக்கூறியபடி கலகலப்பாக பேசி கையசைத்து அரங்கிற்கு சென்றார். கூட்டத்திற்கு பின் வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
நான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது குணமடைந்து விட்டேன். இதனால் கட்சிப்பணியையும் தொடங்கி விட்டேன். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினாார்.
