சத்தீஸ்கரில் 108 நக்சலைட்டுகள் சரண்: பணம், தங்கம் பறிமுதல்

ஜெகதல்பூர்,

வருகிற 31-ந் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்சலைட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த ஆண்டு சூளுரைத்தார். இதையடுத்து அண்மைக் காலமாகவே நக்சலைட்டுகள் ஆயு தங்களை கைவிட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர். இந்தநிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 108 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.

அந்த நக்சலைட்டுகள் கொடுத்த தகவலின்பேரில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ரகசிய இடங்களில் இருந்து ரூ.3.61 கோடி ரொக்கப் பணம் மற்றும் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நக்சலைட்டுகளிடம் இருந்து ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய தொகையும், தங்கமும் சிக்கியது இதுவே முதல் முறையாகும்.

மேலும் ஏ.கே.47, இன்சாஸ், எஸ்.எஸ்.ஆர். ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மேற்படி சரணடைந்த நக்சலைட்டுகளின் தலைக்கு மொத்தமாக ரூ.3.95 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link