சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

மும்பை,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று (13.04.2026 – திங்கட்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 206 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 840 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 449 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 473 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

191 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 706 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 845 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

102 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 302 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 450 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 532 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

Source link