சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை

வெல்லிங்டன்,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லியா தஹுஹு (வயது 35). இவர் 2011ம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். இவர் 2013, 2017, 2022 மற்றும் 2025 ஆகிய 4 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 103 போட்டிகளில் களமிறங்கியுள்ள லியா தஹுஹு 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், 15 ஆண்டுகளாக நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள லியா தஹுஹு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேவேளை, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று லியா தெரிவித்துள்ளார்.

Source link