ஓர்லியன்ஸ்,
ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 12-21, 10-21 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாகனஸ் ஜோகன்நீசெனிடம் தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத் தில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சரிவில் இருந்து மீண்டு 17-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் கிரண் ஜார்ஜை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
