சவால்களை எதிர்கொள்ள தான் கிரிக்கெட் விளையாடுகிறேன்: பும்ரா

மும்பை,

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். மொத்தம் 14 விக்கெட்டு கள் கைப்பற்றி முதலிடம் பிடித்த பும்ரா இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 32 வயதான பும்ரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

சவால்களை பார்த்து ஓடி ஒளிந்து கொள்ள நான் விரும்பமாட்டேன். அழுத்தமான சூழலில் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் வீரராக இருப் பேன். எப்போதும் கடினமான வேலையை செய்து முடிக்க விரும்புகி றேன். சவால்களை எதிர்கொள்வதற்காகத் தான் கிரிக்கெட் விளையாடுகி றேன். அதற்காகத்தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். என் னால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது, அது மிகுந்த மனநி றைவை தருகிறது. அதை விட சிறந்த உணர்வு எதுவும் கிடையாது.

என்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆமதாபாத்தில் இருந்து தொடங்கி னேன். இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். 2023-ம் ஆண்டு இங்கு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளை யாடி தோல்வி அடைந்தோம். ஆனால் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது, அதுவும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது உண்மையி லேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண எனது மகனும் மைதானத்திற்கு வந்திருந்தான். கடந்த முறையும் அவன் இறுதிப்போட் டியை பார்க்க வந்திருந்தான். இதே போல் எனது அம்மாவும் வந்திருந் தார். அது தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பான தருணம்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மிக மிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதில் நடக்காது. இந்த மறக்க முடியாத தரு ணத்தை வழங்கிய கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இவ்வாறு பும்ரா கூறினார்.

Source link