சாதி, மதம் அற்றவன்… சான்றிதழ் பெற முயற்சித்து வருகிறேன்: நடிகர் பார்த்திபன்

சென்னை,

சமீபத்தில் ஐதராபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் தனது சாதி பற்றி பேசியது கடும் விம்ர்சனங்களை ஏற்படுத்தியது. தான், ஒரு நாயுடு பையன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது’என்று பார்த்திபன் பேசியிருந்தார். தனது பேச்சு விமர்சனத்திற்குள்ளான நிலையில், பார்த்திபன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.

சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை பெற முயன்று வருவதாக பார்த்திபன் கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப்பில் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;- மனதளவில் நான் ஜாதியில்லை மதமில்லை என்று உறுதியாய் இருப்பவன். இருந்தாலும் இடையில் அதற்கொரு சோதனை ஏற்பட்டதால் No caste, no religion எ‌‌ன்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறேன் விரைவில் எனக்கொரு சான்றிதழ் கிடைக்கும் அதற்கு முன்பாக ஒரு GO கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

Source link