சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கடந்து வந்த பாதை

மதுரை

19-6-2020 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி, விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில் போலீசார் கடுமையாக தாக்கினர் என புகார் எழுந்தது.

20-6-2020 இருவருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான தாக்குதல் பற்றிய புகார் சமூக ஊடகங்களில் வைரலானது.

Also Read
ஈரான் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கடந்து வந்த பாதை

23-6-2020 பென்னிக்ஸ் மரணம் அடைந்தார்.

23-6-2020 வியாபாரி ஜெயராஜும் மரணம் அடைந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்மட்ட விசாரணை கோரி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தல். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 10 பேர் சில நாட்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியது.

7-7-2020 சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

2020 முதல் 2026 வரை 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சி.பி.ஐ. விசாரணை. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

21-3-2026 மதுரை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டு,வழக்கில் இறுதி தீர்ப்புக்கான தேதியை அறிவிக்கிறது.

23-3-2026 காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உள்பட 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது.

30-3-2026 தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருந்தது. என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? என மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. பின்னர் ஏப்ரல் 2-ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2-4-2026 மத்திய அரசு காலஅவகாசம் கோரிய நிலையில், ஏப்ரல் 6-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

3-4-2026 பாரபட்சமற்ற அதிகபட்ச தண்டனை வழங்க மத்திய அரசு அறிக்கை தாக்கல்

6-4-2026 காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில், இதுவரை யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பால்துரை என்பவர் கொரோனா பாதிப்பால் பலியானார்.

Source link