சாம்சன், பும்ரா இல்லை… ’இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணம் அவர்தான்’- மைக்கேல் கிளார்க்

ஆமதாபாத்,

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் இஷான் கிஷன் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுக்க காரணம் கிஷனின் அதிரடியான பேட்டிங்தான் என கிளார்க் கூறினார்.

அந்த போட்டியில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா அரைசதங்கள் அடித்து அணிக்கு சிறந்த தொடக்கத்தை வழங்கியதாகவும், ஆனால் அதே ரன் வேகத்தை தொடர்ந்து கொண்டு சென்றவர் இஷான் கிஷன்தான் என கிளார்க் பாராட்டினார்.

Also Read
‘நல்ல மனிதர், சிறந்த வீரர்’- சஞ்சு சாம்சனுக்கு ஆர்சிபி வீரர் புகழாரம்
சாம்சன், பும்ரா இல்லை... ’இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணம் அவர்தான்’- மைக்கேல் கிளார்க்

மேலும், பவர் பிளே ஓவர்களில் ரன்கள் அடிப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அதன் பிறகும் அதே அதிரடியை தொடர்வது மிகவும் முக்கியம் என்று கிளார்க் கூறினார். பல சமயங்களில் பவர் பிளே முடிந்த பிறகு ரன் வேகம் குறைய வாய்ப்பு இருக்கும். ஆனால் அந்த நிலை ஏற்படாதபடி கிஷன் சிறப்பாக விளையாடியதாக அவர் கூறினார்.

இந்த தொடரில் இஷான் கிஷனின் மொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்ததாக கிளார்க் தெரிவித்தார். இஷான் கிஷனின் தொடர்ச்சியான அதிரடி இன்னிங்ஸ்களே இந்திய அணிக்கு இந்த பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததாக மைக்கேல் கிளார்க் தெரிவித்தார்.

Source link