சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பாண்டேசரா தொழிற்பேட்டை பகுதி யில் தனியார் சாய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலத்தடி தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.
இந்த பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோனு (வயது23), திலீப் (19) மற்றும் சந்தீப் (23) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரு கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோ தனை செய்த டாக்டர்கள், சோனு, திலீப், சந்தீப் ஆகிய 3 பேரும் ஏற்க னவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
