பெங்களூரு,
2026 ஐபிஎல் தொடர் வருகிற 28ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, 2026 ஐபிஎல் தொடரில் பிளேஆப்ஸ் சுற்றுக்கு செல்லக்கூடிய நான்கு அணிகளை கணித்துள்ளார். அதன்படி, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளேஆப்ஸுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இல்லாதது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு, “யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள்தான் வெல்வார்கள். ஆனால் இந்த முறை புதிய சாம்பியன் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன். அது டெல்லியாக இருக்கலாம்” என அவர் கூறினார்.
