சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி: முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என அறிவிப்பு

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக தோனி சிகிச்சை பெற்று வருகிறார். எனவே ஐபிஎல் தொடரில் முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் வரும் 30 ஆம் விளையாடுகிறது. ராஜஸ்தான் – சென்னை அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் தோனி விளையாட நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அநேகமாக ஏப்ரல் 2 வது வாரத்தில் நடைபெறும் போட்டியில் தோனி விளையாடுவார் எனத்தெரிகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தோனி விளையாடுவரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source link