சினிமாவுக்கு எல்லைகள் என்பதே கிடையாது – நடிகை மாளவிகா மோகனன்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் மாளவிகா மோகனன், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளம், தெலுங்கிலும் பிசியாக உள்ளார்.

Also Read
கவுதம் ராம் கார்த்திக்கின் 19வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு
கோப்புப்படம்

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் சினிமா குறித்து பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. அதில் அவர், “இன்றைய சினிமாவுக்கு எல்லைகள் என்பதே கிடையாது. திறமை இருந்தால் போதும், எந்த மொழி சினிமாவிலும், எந்த மொழியை சேர்ந்த கலைஞர்களும் புகழ் வெளிச்சம் பெறலாம்.

Also Read
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு – அரசாணை வெளியீடு
கோப்புப்படம்

திறமை இருந்தால் பெருமை தேடி வரும். சினிமாவில் வெற்றியும், தோல்வியும் சகஜம்தான். ஆனால் நமது மனநிலையும், படத்தேர்வு முறைகளும், கதாபாத்திரங்களின் உறுதித்தன்மையும் மக்கள் மனதில் நம்மை நிலைபெற செய்யும். அந்த வகையில் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையே…” என்று தெரிவித்துள்ளார்.

Also Read
தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், வகுப்புவாதம் ரீதியிலான கூட்டங்கள் நடத்தக்கூடாது – அரசிதழ் வெளியீடு
கோப்புப்படம்

Source link