‘சிறகுகள் விரியட்டும், வானம் வசப்படட்டும்’ – தங்கம் தென்னரசு மகளிர் தின வாழ்த்து

சென்னை,

அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் தின வாழ்த்துகள் கூறினார்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; ’அன்பால் உலகை அரவணைக்கும் அன்னையராக, அறிவால் தடைகளைத் தகர்க்கும் ஆளுமைகளாகத் திகழும் அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!

‘விடியல் பயணம்’ மூலம் சுதந்திரத்தையும், ‘புதுமைப் பெண்’ மூலம் கல்வியையும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் பொருளாதாரத் தன்னிறைவையும் வழங்கி, பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே நமது திராவிட மாடல் ஆட்சியின் பெருமிதம். உங்கள் சிறகுகள் விரியட்டும், இந்த வானம் உங்கள் வசப்படட்டும்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link