சேலம்
சேலம் மணியனூர் உத்திரப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 13 வயது சிறுமியிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலசுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
