சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி,

திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தமிழரசன் (வயது 30). கொத்த னார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியில் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காதலியின் வீட்டிற்கே செல்லும் அளவுக்கு தமிழரசன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். 2021-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம், திருமணம் செய்வதாக தமிழரசன் உறுதி அளித்தார். காதல னின் வாக்குறுதியை நம்பிய சிறுமி அவரை கணவராகவே எண்ண தொடங்கினார். இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட தமிழரசன் சிறு மியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார். 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது, அந்த சிறுமி தமிழரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை இதுபற்றி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதற்கிடையே சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் மற்றும் இருதரப்பு வாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட தமிழரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இட மின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Source link