ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, தற்பொழுது சிறையில் உள்ள ஹரி நாடார் தனது வேட்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேல இலந்தை குளத்தை சேர்ந்தவர் ஹரி நாடார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல இலந்தை குளத்தை சேர்ந்தவர் ஹரி நாடார் இவருக்கு வயது 45 ஆக இருக்கும் நிலையில், இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் இவர் பனங்காட்டு படை என்ற நாடார் அமைப்பை ஒன்றை நடத்தி வருகிறார்.2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்காயிரத்து 243 வாக்குகள் பெற்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆளங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சியாக போட்டியிட்டார்.இதில் 37 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்றார்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹரி நாடார் போட்டியிட்டபோது அனைவரது கவனத்தையும் இருக்கும் வகையில் ஹெலிகாப்டர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹரி நாடார் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு பிரபலமானவராக அறியப்படுகிறார்.இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி சிறையில் இருக்கும் ஹரி நாடார் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஹரி நாடார் சொத்து மதிப்பு
ஹரி நாடாரை பொருத்தவரை வரவிருக்கும் தேர்தல் மூன்றாவது தேர்தலாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிரமாண பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.ஹரி நாடார் SSLC வரை படித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது . ரூ. 26.76 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 12 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
சிறையில் இருந்து ஹரி நாடார் வேட்புமனு தாக்கல்
இதில் 11.650 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 17.06 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளும் அடங்கும் என்று பிரமாணபத்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அவரிடம் ஆறு நான்கு சக்கர வாகனங்களும் உள்ளன. 2020–21 ஆண்டில் ரூ. 1.52 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். மேலும், புழல் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
