‘சிறை’ பட வெற்றிக்கு தமிழ் ரசிகர்களே காரணம்- இயக்குனர் வெற்றிமாறன்

சென்னை,

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய்குமார், அனிஷ்மா ஆகியோர் நடித்த ‘சிறை’ படம், கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது. இந்த படம் திரையரங்குகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘சிறை’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். அதில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, “சிறை படத்தை தமிழ் மக்கள் பார்த்த விதம் மிகவும் சிறப்பானது. மற்ற மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா என தெரியவில்லை” என்று கூறினார். மேலும், “தமிழ் சினிமாவில் மட்டும்தான் இதுபோன்ற புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நல்ல படங்களுக்காக எடுக்கப்படும் சிறிய முயற்சிகளையும் மக்கள் அங்கீகரித்து ஆதரிக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். வெற்றிமாறனின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link