சிலிண்டர் தட்டுப்பாடு: நடுத்தர, ஏழை மக்கள் பாதிப்பு – கார்கே

புதுடெல்லி,

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்றைய மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

மேற்கு ஆசியாவின் நிலைமை காரணமாக எல்பிஜி சிலிண்டர் பிரச்சினையில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இது நடுத்தர வர்க்கத்தினர், உணவகங்கள், விடுதிகள் மற்றும் வணிக பயனர்களைப் கடுமையாக பாதிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், எல்பிஜி சிலிண்டர் கிடைப்பது மற்றும் விலை ஸ்திரத்தன்மை கடுமையான பிரச்சினைகளாக மாறியுள்ளன. சில பகுதிகளில் அதிகமாக விலை கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்குகின்றனர். இதனால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

மக்களவையில் பேசிய மத்திய பெட்ரோலிய மந்திரி எல்பிஜி பற்றாக்குறை இல்லை என்று கூறுகிறார், ஆனால் கள நிலவரமோ அரசின் கூற்றுகளைத் தவறு என்றே நிரூபிக்கிறது” என்றார்.

இதற்குப் பதிலளித்த மத்திய மந்திரி ஜெ.பி. நட்டா, இது பூஜ்ய நேரம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்திருக்க வேண்டும்; இதில் ஒருவர் 3 நிமிடங்களுக்குள் தனது பேச்சை நிறைவு செய்ய வேண்டும். இவ்விதிமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று கூறினார். மேலும் நாட்டில் அமைதியை விரும்பும் மக்களை காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Source link