சிவகார்த்திகேயன், அஜித் குடும்பத்தை தவெக கட்சிக்காரங்க பேசும்போது விஜய் எங்க இருந்தார்.. கொதித்து பேசிய சீமான் – ntk seeman strongly criticized vijay tvk volunteers activities

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இதனிடையில் இணையத்தில் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் நாதக பெண் வேட்பாளர் குறித்து இணையத்தில் தரக்குறைவாக பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாதக சீமான் தவெக தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து கடும் கோபத்துடன் பேசியுள்ளார்.

சீமான் – விஜய்
சட்டமன்ற தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தனியார் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் தவெக பெண் நிர்வாகிகள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு விஜய் மனு அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாதக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக பெண் தொண்டர்கள் பேச்சால் வருத்தம்

அதாவது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் நாதக சீமான் செய்தியாளர்களிடம் பொன்ராஜ் விவகாரம் குறித்து பேசுகையில், ஒரு தங்கச்சி சொல்லுது, என் வீட்டுக்காரரை விட விஜய்யை தான் பிடிக்கும்னு. இன்னொரு தங்கச்சி குப்பை அள்ளுறவன், ஆட்டோ ஓட்டுறவன் எல்லாம் ரெண்டு பொண்டாட்டி வைச்சுக்கும் போது விஜய் வைச்சுக்க கூடாதான்னு சொல்லுது. நாங்க அக்காவா இருப்போம். தங்கச்சியா இருப்போம். பொண்டாட்டியா கூட இருப்போம்ன்னு இன்னொரு தங்கச்சி சொல்லுது. இப்படி நிறைய காணொளிகள். இதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.
விஜய் கண்டிச்சு இருக்கனும்
சமூகத்தை நேச்சிக்கிற எவனும் நம்ம பெண் பிள்ளைகள் இப்படி மனநிலைல வளராங்க என்ற வருத்தம் இருக்கும். அந்த கவலை பொன்ராஜ் அவர்களுக்கு இருந்த மாதிரி எனக்கும் இருந்தது. உங்களுக்கும் அந்த வருத்தம் இருந்திருக்கும். என் தம்பி விஜய்யும் வருத்தப்பட்டு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கனும். இந்த மாதிரி பேசுறதை என் தங்கைகள் கைவிடனும் என்று அவர் சொல்லி இருக்கனும். ஆனால் கண்டிக்கலை. தொடர்ச்சியாக பேசட்டும் சொல்லி விட்டுட்டாங்க.
தவெக தொண்டர்கள் பேசியதை புத்தகமாக போடலாம்
பெண்களை பொன்ராஜ் இழிவாக பேசிவிட்டார் என்பது உங்களின் கருத்து. அவர் தன்னோட வருத்தத்தை பதிவு பண்ணி இருக்கார். ஆனால் இவரோட கட்சியை சார்ந்தவர்கள் என்னை. என்னோட குடும்பத்தை, தம்பி சிவகார்த்திகேயன் குடும்பத்தை, அருமை சகோதரர் அஜித்குமார் குடும்பத்தை இழிவா பேசுறாங்க. அதை புத்தகமாக போடலாம். என் தங்கச்சி சங்கீதாவை அவருடைய ரசிகர்கள் தான் ஆபாசமாக இணையத்தில் போடுறாங்க.
எனக்கு இதெல்லாம் வரும்போது, உங்க கட்சில இரண்டாம் கட்ட தலைவர்கள் இதையெல்லாம் பார்த்து இருக்க மாட்டாங்களா. இந்த மாதிரியெல்லாம் கண்ணியம் இல்லாமல் பதிவை போடாதீங்க. இப்படியெல்லாம் செய்யாதீங்கன்னு அறிக்கை விட்டு இருக்கலாம்ல. நேர்மையாக இதையெல்லாம் செய்யாதீங்க கண்டிச்சு இருந்தால், அவர் பொன்ராஜ் ஐயா மீது புகார் கொடுத்து இருக்கலாம். அப்பதான் அதுக்கான தகுதியும், நேர்மையும் அவருக்கு இருந்திருக்கும்.
விஜய்க்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நீங்க எங்க குடும்பங்களை, என்னோட மனைவியை, என் தம்பி சிவகார்த்திகேயன் குடும்பத்தை, அஜித் அவர்கள் குடும்பம் பிள்ளைகளை பற்றி பேசும்போது நீங்க எங்க இருந்தீங்க. அப்போ உங்க கட்சிக்காரங்க என் கட்சி பிள்ளைகளை, மற்ற கட்சி பெண் பிள்ளைகளை அவ்வளவு கேவலாக எழுதுகிறான். அதையெல்லாம் சேர்த்து எடுத்துக்கிட்டு இதே கமிஷனர் அலுவலத்தில் விஜய் மீது புகார் கொடுத்தால் எப்படி இருக்கும். அவரோட கட்சிக்காரங்களை கண்டிக்கலை. நடவடிக்கை எடுங்கன்னு புகார் கொடுக்கலாம்.
பெண்கள் அதிருப்தியில் உள்ளனர்
அவர் கட்சிக்காரங்க பேசுனதை புத்தகம் போடலாமா. பொன்ராஜுக்கு கட்சி கிடையாது. ஓட்டு கிடையாது. சமூக அக்கறைல பேசிட்டார். ஆதங்கத்துல அவர் சொல்றார். அதுவே உங்களுக்கு தவறாக படுதுன்னா, மத்தவங்களை அசிங்கப்படுத்தனும் என்ற நோக்கத்தோட உங்க கட்சிக்காரங்க செய்றாங்க. அதை என்ன செய்யலாம். அண்மையில் நடந்த சம்பவங்களால பெண்கள் எல்லாரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதற்காக பெண்ணுக்காக நான் வருவேன் சொல்லி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.
இன்னும் நீங்க நடிச்சுட்டு தான் இருக்கீங்க. இப்போ தரைல நடிச்சுட்டு இருக்கீங்க. எந்த பிரச்சனைக்கும் அவர் வெளியே வரலை. அவரால இறந்தவனை பார்க்கக்கூட வரலை. அங்க போனால் கூட்டம் வரும் என்றால் வளைகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிக்கு போனால் கூட்டம் வராதா? தஞ்சாவூரில் விஜய்யை பார்க்க போய் இறந்த பையனுக்காக ஹாஸ்பிட்டல்ல போய் என் கட்சிக்காரன் தான் போய் நின்னான். இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார் சீமான். அவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.