காரைக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்த சீமான், தமக்குச் சொந்தமாக வீடோ நிலமோ இல்லை என்றும், தன் மீது 24 வழக்குகள் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
சொந்தமாக அசையா சொத்து இல்லை
சீமான் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), அவருக்குச் சொந்தமாக வீடு அல்லது நிலம் போன்ற எந்தவொரு அசையா சொத்துக்களும் இல்லை (Nil Immovable Assets) என்று குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரமான சம்பவம் செய்த நாம் தமிழர்…2026 நாங்க தான்!
சீமான் சொத்து விவரங்கள்
- சீமானின் அசையும் சொத்துக்கள்: ₹39.81 லட்சம்.
- மனைவி கயல்விழி சொத்து மதிப்பு சீமானை விட அவரது மனைவி அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ₹3.44 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சீமான் குடும்பத்தினர் வசம் ₹19.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன.
24 வழக்குகள் – ஒரு தேசத்துரோக வழக்கு!
அரசியல் போராட்டங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் தொடர்பாகச் சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் மீது ஒரு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தடையை மீறிப் போராட்டம் நடத்துதல் போன்ற பிரிவுகளின் கீழும் வழக்குகள் உள்ளன.
சொந்த மண்ணில் போட்டி
கடந்த 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்ட சீமான், இம்முறை தனது சொந்த ஊர் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. “மாற்றம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது செயல்” என்று முழங்கிய சீமான், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்குத் தகுந்த மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், சீமானின் இந்த ‘எளிமையான’ சொத்து விவரம் அவரது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள்:
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி (நாதக) 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சமத்துவ அடிப்படையில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்களை அக்கட்சி களமிறக்கியுள்ளது.
- சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர்): சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
- வித்யாராணி வீரப்பன் (வீரப்பனின் மகள்): சேலம் மாவட்டத்தின் மேட்டூர் தொகுதியில் களம் காண்கிறார்.
- எம். களஞ்சியம் (திரைப்பட இயக்குநர்): சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
- இடும்பாவனம் கார்த்திக் (கட்சி செய்தித் தொடர்பாளர்): நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் தொகுதியில் களம் காண்கிறார்.
- பர்ஹானா பாத்திமா (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்): நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- மரியா ஜெனிபர்: கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மண்டல முக்கிய வேட்பாளர்கள்:
- திருவொற்றியூர்: சத்ய பாஸ்கர்
- பெரம்பூர்: வெற்றித்தமிழன்
- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: ஆயிஷா பேகம்
- மயிலாப்பூர்: மகாலட்சுமி
