பாஜகவில் அதிருப்தி அலை நீடிப்பது வெளிப்படையா கியுள்ளது, இதற்கிடையில் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு உட்கட்சி பூசல் வெடிக்கும் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள் .
ஆனால் பாஜக தொடர்ந்து தமிழகத்தில் காலூன்ற போராடி வருகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர்களாக இருந்த எல். முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை ஆகியோர் பாஜகவை வெற்றி பாதைக்கு கூட்டி செல்லாவிட்டாலும் அந்த கட்சியை ஒரு limelight – லாவது வைத்திருந்தனர். ஆனால் நயினார் நாகேந்திரன் வருகைக்கு பிறகு கட்சி கட்டுக்கோப்பிலே இல்லை என்கின்றனர் சில நிர்வாகிகள்.
பாஜகவில்இருக்கக்கூடிய அதிருப்தி நிர்வாகிகள்
பாஜக தலைமையோடு அதிருப்தியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளை திமுக தன்வசம் இழுக்கும் வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவிற்கு கொடுத்த 27 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்கள் பாஜக வெல்வதற்கு வாய்ப்பு குறைவாக உள்ள இடங்கள் என கூறி பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்ட சிங்காநல்லூர் தொகுதியும் கொடுக்க அதிமுக முன்வராததால் அண்ணாமலை ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த முறை பாஜக அதிக ஓட்டுகளை பெற்ற சென்னையின் தி நகர், வேளச்சேரி தொகுதிகளை கூட்டணி தலைமையிடம் பாஜக தலைமை பேசி வாங்கவில்லை என்பதாலும் ஆனால் தமிழிசைக்கு மட்டும் மயிலாப்பூர் தொகுதியை கேட்டு வாங்கி இருப்பதாகவும் கூறி தேர்தல் பணிகளில் ஈடுபட பாஜக நிர்வாகிகள் நோ சொல்லுகிறார்களாம்.
இதனை ஒட்டியே பாஜக பொருளாளர் எஸ்ஆர். சேகர் “இது எட்டப்பன்களின் காலம்” என விமர்சனம் செய்திருந்தார்.
செந்தில் பாலாஜிக்கு அசைன்மென்ட்
இதற்கிடையில் அதிருப்தியில் சுற்றிக் கொண்டிருக்கும் பாஜக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திமுக தலைமை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக பட்டியல் இப்போது வெளிவரும் என்று கேள்வி வேறு எழுந்திருக்கிறது.
பாஜகவின் கடந்த கால வரலாறு
- பாஜக கடந்த 2011ஆம் ஆண்டு 2.22% வாக்குகளை பெற்றிருந்தது.
- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 2.9% சதவீத வாக்குகளை பெற்றது.
- 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 2.62 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. ஆனால் படிப்படியான இந்த வாக்கு சதவீத உயர்வு பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.
தேர்தலுக்கு 11 மாதங்களுக்கு முன்பு கூட்டணி அமைத்த அதிமுக – பாஜக களத்தில் ஒன்று சேரவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன. மேலும் பாஜக தொண்டர்களும் அதிமுக தொண்டர்களும் முரண்டு பிடித்துக் கொண்டு தேர்தல் வேலைகளை செய்ய மறுப்பதால் பொருந்தா கூட்டணி என விஜய் விமர்சிக்கும் நிலைமைக்கு கூட்டணி சென்றது.
வேட்பாளரை இறுதி செய்யாத பாஜக
இந்த சூழலில்தான் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாஜகவிற்கு 27 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் பாஜக ஏற்கனவே முப்பது தொகுதிகளுக்கு மேல் கேட்டதாகவும் அந்த முப்பது தொகுதிகளும் கோவில்கள் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகளாகவும் மேலும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கக் கூடிய தொகுதிகளாகவும் இருந்ததாக சொல்லப்பட்டது.
இதனால் கடுப்பான அதிமுக தலைமை பாஜகவிற்கு ஒதுக்கிய பல தொகுதிகளில் கோவில் நகரங்களை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. பாஜக அளித்திருந்த உத்தேச பட்டியலில் திருப்பரங்குன்றம், திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், ஸ்ரீரங்கம்,மயிலாப்பூர் உள்ளிட்ட பல தொகுதிகள் இருந்தன. அவற்றில் சில விருப்பத்தொகுதிகளை மட்டுமே அதிமுக தலைமை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தொகுதி பங்கீடு செய்த பின்னரும், எந்தெந்த தொகுதி யாருக்கு என ஒதுக்கப்பட்ட பின்னரும் வேட்பாளர் பட்டியலை பாஜக என்னும் வெளியிடவில்லை. நேற்றைய தினம் சென்னை வந்த தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் பாஜக வேட்பாளர் பட்டியல் வழியாக இன்னும் ஓரிரு நாட்களாகலாம் என தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்கள் இருக்கக்கூடிய சூழலில் அனைத்து கட்சிகளும் பம்பரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் பாஜக இன்னமும் வேட்பாளரை கூட அறிவிக்காத நிலையில் இது தேர்தலில் பிரதிபலிக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
