சென்னையில் இந்தியா- ஜிம்பாப்வே மோத வாய்ப்பு ?

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

‘பி’ பிரிவில் அங்கும் வகிக்கும் ஜிம்பாப்வே அணி தனது முதல் இரு ஆட் டங்களில் ஓமன் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய இரு ஆட்டங்களில் அயர்லாந்து மற்றும் இலங்கையுடன் மோத வேண்டி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, அயர்லாந்தை வீழ்த்தினால் சிக்கலின்றி சூப்பர் சுற்றை எட்டிவிடலாம்.

நடப்பு உலகக் கோப்பையில் சென்னைக்கு ஒரே ஒரு சூப்பர் 8 சுற்று ஒதுக் கப்பட்டுள்ளது. வருகிற 26-ந்தேதி அந்த ஆட்டம் நடக்கிறது. அனேகமாக அந்த ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் தற்போதைய சூழலில் அந்த ஆட்டத்தில் இந்தியா- ஜிம்பாப்வே மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Source link