சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென் னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில் இன்று தொடங்கு கிறது. 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 17 நாடு களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டி தரநிலையில் முதல் 16 இடங்களில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா, சத்யன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மானவ் தாக்கர்-மானுஷ் ஷா, கலப்பு இரட்டையரில் மானுஷ் ஷா-தியா சித்தலே உள்ளிட் டோர் களம் காணுகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரி வில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சமும், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

Source link