சென்னையில் சிக்கிய ஆதாரங்கள்.. விளக்கம் அளித்த திமுக வேட்பாளர் வைத்திலிங்கம்.. – orathanadu dmk candidate vaithilingam press meet regarding visiting cards and dummy evm machines seized by election flying squad in chennai

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம். டெல்டாவை பொறுத்தவரை வைத்திலிங்கத்துக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. நெருங்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவருடைய புகைப்படம் அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான விசிட்டிங் கார்டுகள் மற்றும் 100 டம்மி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், வைத்திலிங்கம் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் பொது வாழ்க்கைக்கு வந்து 50 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இதுவரை என்னுடைய பெயரில் எந்தவொரு விசிட்டிங் கார்டு கூட அடித்தது கிடையாது. எனது அரசியல் வாழ்க்கைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரோ என்னுடைய புகைப்படத்துடன் விசிட்டிங் கார்டு அடித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு அவதூறு பரப்பும் வகையில் குறிப்பிட்ட ஒரு தனியார் தொலைக்காட்சியில் மட்டும் செய்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது ஒரு தவறான செய்தி என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

என்ன ஆதாரங்கள், என்ன நடந்தது?

கடந்த ஏப்ரல் 09ந் தேதி இரவு 11 மணியளவில் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம், 100 அடி சாலை அருகே அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, அந்த ஆட்டோவில் 5 பார்சல்கள் கொண்ட 100 பெட்டிகள் இருந்துள்ளன.

அந்த பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அப்போது, அந்த பெட்டிகளில் தெர்மாகோலால் தயாரிக்கப்பட்ட 100 போலியான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நிஜ வாக்கு இயந்திரங்களில் இருப்பது போன்றே போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், வைத்திலிங்கம் புகைப்படம் அச்சிடப்பட்ட 20,600 விசிட்டிங் கார்டுகளையும் பறிமுதல் செய்து, அண்ணா நகர் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும்பொருட்களை கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அந்த ஆட்டோவில் இருந்த பொருட்கள் கோவையைச் சேர்ந்த SRK Manpower Company நிறுவன உரிமையாளர் சிவராமன் என்பவருக்கு சொந்தமானது என்றும், சிவராமன் தான் தனது ஊழியரான செல்வம் என்பவரை பார்சலை எடுத்து வர கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

“அதிமுக பிளவுபட திட்டம் தீட்டியவர் வைத்திலிங்கம்” தங்கமணி குற்றச்சாட்டு!

அதுமட்டுமின்றி, அந்த பொருட்களை வடபழனியில் இருந்து கோயம்பேடு வழியாக பார்சல் சர்வீஸ் மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link