சென்னையில் பயிற்சி முடித்த ஆயுதப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

சென்னை,

குறுகிய சேவை ஆணையம் (Short Service Commission – SSC) என்பது இந்திய ஆயுதப்படைகளில் (ராணுவம், கடற்படை, விமானப்படை) 10 முதல் 14 ஆண்டுகள் வரை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அதிகாரிகளாக பணியாற்றும் ஒரு ஒப்பந்த அடிப்படையிலான சேவையாகும். இந்த பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியை முடித்த அதிகாரி அளவிலான 121 ஆண்கள் மற்றும் 35 பெண்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏஜே பெர்னாண்டஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது பயிற்சி முடித்த வீரர்கள் உடல் வலிமை சார்ந்த பயிற்சித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை பயிற்சி (AMAR), குதிரையேற்றம், இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டு மற்றும் பங்கர் பர்ஸ்டிங் டிரில் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.

Source link