சென்னையில் ’பிக்பாஷ்’ லீக்…ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளான் – காரணம் என்ன?

சென்னை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2026-27 சீசன் ’பிக்பாஷ் லீக்‘ (BBL) தொடக்க ஆட்டத்தை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அதிகாரிகள் அண்மையில் சென்னை வந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு இதற்கு காரணம் என்று தெரிகிறது.

2025-26 பிக் பேஷ் லீக் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Also Read
தோனியால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்…..பாகிஸ்தான் வீரர்
சென்னையில் ’பிக்பாஷ்’ லீக்...ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளான் - காரணம் என்ன?

அடுத்த சீசனை சென்னையில் தொடங்குவதன் மூலம் இந்திய மற்றும் தென் ஆசிய சந்தையை விரிவுபடுத்துவதே ஆஸ்திரேலியாவின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்காக பிசிசிஐ மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களின் அனுமதி அவசியமாகும்.

பிக் பேஷ் லீக்கில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2025-26 சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகினார்.

Source link