சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக முதல்பாதி ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியகியுள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏற்கனவே காயம் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
