சென்னை அணிக்கு விடிவு காலம் எப்போது ? புள்ளி பட்டியலில் பரிதாப நிலை

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடமும், அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 3வது ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராகவும் சென்னை அணி தோல்விடைந்தது.

புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது. இது சென்னை அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் ருதுராஜ் சிறப்பாக செயல்படாதது , எதிர்பார்க்கப்பட்ட்ட சஞ்சு சாம்சன் சொதப்புவது மற்றும் பந்துவீச்சில் பலம் இல்லாதது, தோனி காயம் காரணமாக விலகியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை அணிக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மொத்தம் உள்ள 10 அணிகளில் 9 அணிகள் ஏதேனும் வகையில் புள்ளிகளை பெற்றுவிட்டன. ஆனால், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 0 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

Source link