சென்னை அணியை கரைசேர்ப்பாரா ருதுராஜ் ? கேப்டன்சி குறித்து எழும் விமர்சனங்கள்

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடமும், அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 3வது ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராகவும் சென்னை அணி தோல்விடைந்தது.புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது. இது சென்னை அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ருதுராஜின் கேப்டன்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சரியாக பீல்டிங் செட் செய்யாதது , சரியான முறையில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாதது என அவரின் கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவரின் பேட்டிங் பார்மும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ருதுராஜை சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை அணி ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ருதுராஜ் கேப்டன்சி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்,

சிஎஸ்கே அணிக்கு எங்கே நிற்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அணியின் கேப்டன் எல்லா நேரமும் வெறும் கைகளை மட்டும் அசைத்து கொண்டுஇருக்கிறார். என தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் 21 போட்டிகளில் சென்னை அணி 13 தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையெல்லாம் கடந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சென்னை அணியை ருதுராஜ், சாம்பியன் அணியாக மாற்றுவாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி விரைவில் மீண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பேட்டிங் அல்லது கேப்டன்சி இரண்டில் எதன்மீது பயம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு யாரும் எதிர்பார்க்காதவாறு “டாஸ்” என்ற பதிலை அளித்துள்ளார் ருதுராஜ் அளித்துள்ளார். டாஸ்சென்னை அணிக்காக கேப்டன்சி மேற்கொண்ட ருதுராஜ் 21 போட்டிகளில் சுமார் 16 போட்டிகள் வரை டாஸ் தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link