சென்னை ஓபன் டென்னிஸ்: சுமித் நாகல் தோல்வி

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம் பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சுமித் நாகல் ரஷியாவின் பார் பிர்யுகோவிடம் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 6-7 (2), 3-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார். . மற்றொரு ஆட்டத்தில் முகுந்த் சசிகுமார் (இந்தியா) தன்னை எதிர்த்த கஜகஸ்தானின் டெனிஸ் யவ்சேவிடம் 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

Source link