சென்னை: கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறிப்பு

சென்னை,

சென்னை அருகே உள்ள புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ராஜன் (வயது 24). மருந்தக ஊழியரான இவர் கோயம்பேட்டில் உள்ள அவருடைய பெற்றோரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

பழைய மகாபலிபுரம் சாலை பாலத்தின் கீழ் யுடர்ன் அடித்த போது, மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய செல்போனை பறித்தனர்.

பின்னர் அவருடைய மோட்டார் சைக்கிளையும் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஆகாஷ் ராஜன் உஷாராகி அவர்கள் பிடியில் இருந்து தப்பினார். செல்போன் வழிப்பறி சம்பவம் குறித்து ஆகாஷ் ராஜன் அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source link