சென்னை,
சென்னை, கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அறிஞர் அண்ணா திருமண மாளிகை, ஜி.கே.எம். காலனியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 551 நபர்களுக்கு பட்டா வழங்கினார்.
பேப்பர் மில்ஸ் சாலை, வீனஸ் தியேட்டர் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்நோக்கு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
பேப்பர் மில்ஸ் சாலை, எவர்வின் பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பல்லவன் சாலை, டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் 8ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
செல்லப்பா முதலி தெரு, ஓட்டேரியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
