சென்னை – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னை,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு, சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வண்டி எண்- 06115) சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு வருகிற 15-ந்தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06119) மறுநாள் காலை 6.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். கொல்லத் தில் இருந்து 16-ந்தேதி காலை 10.40 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06120) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link